2024-வது ஆண்டுக்கான விக்கிமேனிய புரவர் அறிவிப்பு

Translate this post

விக்கிமேனியா ஸ்டீரிங் கமிட்டி, 2024 அமைப்புக் குழு மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளை இயக்கம் தொடர்பாடல் குழு ஆகியவை போலந்தில் உள்ள கிராகோவ் நகரம் 2024-இல் விக்கிமேனியாவை நடத்தும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

Krakau ist die zweitgrößte und eine der ältesten Städte Polens und gehört zum UNESCO-Weltkulturerbe

2024, 2025 மற்றும் 2026 ஆண்டுகளுக்கான விக்கிமேனியாவை நடத்துவதற்கு கிடைத்த ஆர்வத்தின் வெளிப்பாடுகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் இயக்கத்தின் அன்புக்குரிய நிகழ்வை உயிர்ப்பிப்பது எளிதானது அல்ல, மேலும் பல அளவுகோல்களை நாங்கள் கருத்தில் கொண்டோம். கிராகோவ் ஒரு வலுவான சமர்ப்பிப்புடன் இருந்தது, மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய (ம.கி.ஐ.) பிராந்தியத்தில் இருந்து ஒரு அனுபவமிக்க மற்றும் உற்சாகமான குழு அதை ஆதரித்து, முன்னெடுத்து செல்ல தயாராக இருந்தது. ம.கி.ஐ.யில் இதற்கு முன்பு விக்கிமேனியா 2010-இல் க்டான்ஸ்க் நகரில் நடைபெற்றபிறகு இந்த துடிப்பான பிராந்தியத்தில் மீண்டும் நிகழ்வினை நடத்த நாங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

கிராகோவ் என்பது புதுமை, நவீனத்துவம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பண்டைய ரத்தினங்களுடன் கலந்த, விக்கிமீடியர்களுக்கு மிகவும் பொருத்தமான, ஒரு காலமற்ற நகரமாகும். ஒரு வலுவான, கூட்டு வடிவமைப்பு ஆதரவுடன், விக்கிமேனியா 2024-இன் தாக்கம் எங்கள் திட்டங்களுக்கும், பொதுவாக இயக்கத்திற்கும் மற்றும் ம.கி.ஐ. பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கும் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். விக்கிமேனியா பொதுவாக சூலை அல்லது ஆகத்து மாதத்தில் நடைபெறும். தயாராகுங்கள், உற்சாகமாகுங்கள்!

2021, 2022 ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட மெய்நிகர் விக்கிமேனியாக்களால் ஈர்க்கப்பட்டு, புதிய அணுகுமுறையான விக்கிமேனியாவை நடத்துவதற்கு கூட்டு அணுகுமுறையையும், 2023-ஆம் ஆண்டின் சிங்கப்பூர் விக்கிமேனியா கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாளர்களின் சிறப்பான பணியையும் நாங்கள் பாராட்டுகிறோம். விக்கிமேனியாவின் பொறுப்பாளர்களாக நாங்கள் வழங்கும் ஆதரவுடன், அறக்கட்டளையின் இயக்கம் தொடர்பு குழுவுடன் சேர்ந்து, விக்கிமேனியா அமைப்பாளர்களுக்கு அதிக நேரத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம், இதனால் அவர்கள் நடைமுறையில் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளலாம். அதனால்தான் வரும் மாதங்களில் 2025, 2026 ஆண்டுகளுக்கான புரவர்களை அறிவிக்கமுடியும் என்று நம்புகிறோம். எனவே, நீங்களும் உங்கள் சமூகமும் விக்கிமேனியாவை நடத்துவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தீர்களானால், தயவுசெய்து அளவுகோல்களை மதிப்பாய்வு செய்து, விரைவில் எங்களைத் wikimania@wikimedia.org என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

2024 விக்கிமேனியா குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கிராகோவிற்கு நேரிலோ அல்லது ஆன்லைனிலோ உங்கள் அனைவரையும் வரவேற்கும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வுக்காக நாங்கள் ஒன்றுபட்டு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?

No comments

Comments are closed automatically after 21 days.